மீன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ரூ 7,522 கோடி ஒதுக்கீடு

Forums Communities Fishermen மீன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ரூ 7,522 கோடி ஒதுக்கீடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14796
  Kalyanaraman M
  Keymaster

  நாடு    முழுவதும்  மீன்   உற்பத்தியை   பல  மடங்கு  உயர்த்திட   தேவையான   கட்டமைப்புகளை   உருவாக்க    மத்திய   அரசு   ரூ.  7 ஆயிரத்து   522  கோடி   ஒதுக்கீடு   செய்துள்ளது.  பிரதமர்   நரேந்திர  மோடி   அதற்கான   ஒப்புதல்   அளித்துள்ளார்

  இந்தியாவில்   உள்ள   13  கடற்கரை   மாநிலங்களில்    கடல்   மற்றும்  உள்நாட்டு    நீர்நிலைகளில்    மீன்   பிடிக்கப்படுகிறது.  பிற  26 மாநிலங்களிலும்    உள்ள    ஆறுகள்,   அணைகள்,   நதிகள்,   ஏரிகள்,   குளம்,   குட்டைகளில்    மீன்   பிடிக்க   படுகிறது .  இது   தவிர    செயற்கை   குளங்கள்   உருவாக்கப்பட்டு    மீன்   வளர்க்கப்படுகிறது.

  நாட்டில்    ஆண்டு   ஒன்றுக்கு    1.20  கோடி  டன்   மீன்   உற்பத்தி  நடக்கிறது.

  இந்த  மீன்   உற்பத்தி,   அறுவடையை    பல   மடங்கு   உயர்த்த மத்திய   அரசு   திட்டமிட்டுள்ளது.

  மத்திய   அரசின்  பொருளாதார  விவகாரங்களுக்கான   மத்திய  அமைச்சரவை    கூட்டம்    பிரதமர்   நரேந்திர   மோடி   தலைமையில்    நேற்று   நடந்தது.

  மீன்வளத்துறையின்    மூலம்   மீன்  பிடி  உள்கட்டமைப்பு   வளர்ச்சிக்கான    சிறப்பு    நிதியும்   உருவாக்க    பிரதமர்   நரேந்திர  மோடி   ஒப்புதல்   அளித்தார்.

  இதற்காக    இந்த    சிறப்பு    நிதியத்திற்கு   ரூ.  7 ஆயிரத்து   522   கோடி    நிதி   ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதன்மூலம்   2018 – 19 ஆம்   ஆண்டில்   தொடங்கி  2022 – 23 வரை  5 ஆண்டுகளுக்கு    நிதி   உதவி    அளிக்கப்படும்

  இந்த   நிதி  மூலம்   மாநில  மற்றும்   யூனியன்   பிரதேச    அரசுகள்,  கூட்டுறவு  வங்கிகள்    மற்றும்   மீன்  பிடித்துறையில்  உள்ள   தனி   நபர்களுக்கு    நிதி  உதவி   அளிக்கப்படும்

  இந்த   கடனை   திரும்ப   செலுத்த    அதிகபட்சமாக    12   ஆண்டுகள்  வரை   அவகாசம்    அளிக்கப்படும்.

  இதன்   மூலம்   மீன்   உற்பத்தியை    அதிகரிக்கவும்,  இத்துறையில்   ஒன்பது  லட்சம்  பேருக்கு    கூடுதலாக   வேலை   வாய்ப்பு    உருவாக்கவும்  மத்திய   அரசு   திட்டமிட்டுள்ளது.

  2018 – 19 ஆம்   ஆண்டுக்கான    பட்ஜெட்டில்   அறிவிக்கப்பட்டிருந்த  திட்டம்    தற்போது    நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This