இந்திய கடலோர சமூகங்கள் பருவநிலைமாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ 315 கோடி ஐநா நிதி

Forums Communities Fishermen இந்திய கடலோர சமூகங்கள் பருவநிலைமாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ 315 கோடி ஐநா நிதி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14791
  Kalyanaraman M
  Keymaster

  இந்திய கடலோர   மாநிலங்களில்   பருவநிலை   மாற்றங்களால்   ஏற்படக்  கூடிய   பெரும்  பாதிப்புகளை   கடற்கரை   சமூகம்   எதிர்கொள்ள   மேற்கொள்ளப்பட   வேண்டிய  நடவடிக்கை  எடுக்க   ஐக்கிய   நாடுகள்  சபை  மூலம்  ரூ 315   கோடி   அளவிலான   (43  மில்லியன்   அமெரிக்க   டாலர் )  நிதி  உதவி  வழங்கப்பட்டுள்ளது  .

  பருவநிலை  மாற்றங்களால்   ஏற்படக்கூடிய   பெரும்  விளைவுகளை   பாதிப்புகளை   எதிர் கொள்வதற்கான   திட்டங்களை   நிறைவேற்ற   19 புதிய  திட்டங்கைளை   வளரும்   நாடுகளில்   செயல்படுத்த   பசுமை  பருவநிலை   நிதி   (Green   Climate Fund )  மூலம்   1  பில்லியன்   அமெரிக்க   டாலர்    நிதி  ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ளது  .

  அதில்   ஒரு  பகுதியாக   இந்தியாவில்   பருவநிலை   மாற்றத்தால்   பெரும்  பாதிப்பிற்கு  உள்ளாகக்   கூடிய   கடலோர   மாநிலங்களான   ஆந்திர  பிரதேசம்  , மகாராஷ்ட்ரா   , ஒடிசா  ஆகிய   3  மாவட்ட   கடற்கரை   பகுதி    சமூகங்களுக்கு   உதவிடும்     வகையில்   திட்டங்களை   செயல்படுத்தப்பட   வேண்டியுள்ளது .

  ஒருங்கிணைக்கப்பட்ட    நீடித்த   வளர்ச்சிக்குறித்த   2030  ஆண்டுக்கான    அட்டவணை   மற்றும்   பாரீஸ்   நகர   ஒப்பந்தம்   அடிப்படையில்   இத்திட்டம்   உருவாக்கப்பட்டுள்ளது   .

  பருவநிலை   மாற்றத்தால்   பாதிக்கப்படும்   இந்திய   கடலோர  பகுதிகளுள்  மிக  மிக  அதிகமாக   பாதிக்கப்படக்கூடிய   விளிம்பு  நிலை   பகுதிகளாக   அடையாளம்  காணப்பட்டுள்ள   ஆந்திரா, மகாராஷ்டிரா,  ஒடிஷா   மாநிலங்களின்   குறிப்பிடப்பட்ட  கடற்கரை  பகுதிகள்   அடையாளம்  காணப்பட்டுள்ளன.

  இந்த  திட்டங்கள்   இந்திய அரசின்  சுற்று  சூழல்   வனம்  மற்றும்  பருவநிலை   மாற்றத்துக்கான   அமைச்சகத்துடன்   இனைந்து   செயல்படுத்தப்படும்.

  இந்த  திட்டத்தின்  மூலம்   பருவநிலை   மாற்றத்தினை   எதிர்கொள்வதற்கான    நேரடியான    பொது   திட்டங்களுடன்,    கடற்கரையில்   வாழும்   சமூகங்களுக்கான   வாழ்வாதார  திட்டங்களும்   செயல்படுத்தப்படும்    என்று    அறிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This