தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டிய நிலையில், இரவு இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் லேசான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.