சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றப் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களாக கடந்த வாரம் நியமிக்கபட்ட 80 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி ரீதியாக கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் சிறப்பாகப் பணியாற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மறைந்த மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகத்திற்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.