இறக்குமதி மீன்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க பங்களாதேஷ் புதிய சட்டம்

Forums Communities Fishermen இறக்குமதி மீன்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க பங்களாதேஷ் புதிய சட்டம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14769
    Inmathi Staff
    Moderator

    பங்களாதேஷ்   நாட்டில்   வெளிநாடுகளில்   இருந்து   இறக்குமதி  செய்யப்படும்  மீன்கள்  மூலம்   நோய்  பரவாமல்   இருப்பதை   தடுப்பதற்காக   புதிய  சட்டம்   இயற்றுவதற்கான   சட்ட  மசோதா   அந்நாட்டு   பாராளுமன்றத்தில்   தாக்கல்   செய்யப்பட்டுள்ளது.

    “மீன்  பாதுகாப்பு   தனிமைப்படுத்துதல்   சட்டம்  2018 என்ற   பெயரில்   ஒரு   புதிய   சட்ட   மசோதா    கடந்த   ஞாயிற்றுக்கிழமையன்று  பங்களாதேஷ்   நாட்டின்   நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யப்பட்டது.  மீன்வளம்   மற்றும்     கால்நடை    பராமரிப்பு   அமைச்சர்    நாராயண   சந்திர  சந்தா  மசோதாவை  தாக்கல்   செய்தார்.  வெளிநாடுகளிலிருந்து   இறக்குமதி  செய்யப்படும்   மீன்கள்   மூலம்    நோய்   தொற்று    கிருமிகள்   நாட்டிற்குள்  வருவதை  தடுக்கும்   நோக்கத்தில்    இந்த   மசோதா   தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக   குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த  புதிய  சட்டத்தின்படி   அந்த   நாட்டுக்குள்    இறக்குமதி  மூலம்   கொண்டுவரப்படும்   கடல்  உணவு   மற்றும்  உள்நாட்டு   வளர்ப்பு   மீன்வகைகளை   சாலை,  விமானம்,   மற்றும்    நீர்  போக்குவரத்து   மூலம்  கொண்டு   வரும்போது    அவைகளை    கண்காணித்து,   பரிசோதித்து,  கிருமிகள்   இல்லை    என்று   கண்டறிந்து      நாட்டுக்குள்    அனுமதி   வழங்கும்    அதிகாரம்  மீன்வளத்துறைக்கு    வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி   மீன்  இறக்குமதி   செய்யும்  நிறுவனம்  அல்லது   தனிநபர்களுக்கு   ஓராண்டு   முதல்    அதிகபட்சம்   7  ஆண்டுகள்   வரை  சிறை   தண்டனையும்,   பங்களதேஷ்   மதிப்பில்    5  லட்சம்   டகா  அபராதமும்    விதிக்கப்படும்   என்று   அறிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This