மீன் எண்ணெய் தயாரிக்க ரூ 1 கோடி 25 லட்சம் மதிப்பிலான 82 டன் கழிவு மீன் ஏற்றுமதி

Forums Communities Fishermen மீன் எண்ணெய் தயாரிக்க ரூ 1 கோடி 25 லட்சம் மதிப்பிலான 82 டன் கழிவு மீன் ஏற்றுமதி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14767
  Inmathi Staff
  Moderator

  காரைக்கால்   மாவட்ட   மீன் பிடி  துறைமுகத்திலிருந்து   ஒரே நாளில்   ரூ  1 கோடியே  25 மதிப்பிலான   82 டன்  கழிவு  மீன்கள்   மீன்  எண்ணெய்   தயாரிப்பதற்காக    ஏற்றுமதி    செய்யப்பட்டுள்ளது.

  காரைக்கால்  மீனவர்கள்   மீன்களோடு   சிரியவகையிலான    வளர்ச்சி  அடையாத   மீன்   குஞ்சுகளை  பிடிப்பது  வழக்கம்.    அத்தகைய  மீன்  குஞ்சுகளை  பிடித்த  பின்னர்   அவைகளை  கழிவுகளாக   கரைக்கு   கொண்டுவராமல்    கடலிலேயே   கொட்டிவிடுவதும்   உண்டு.  ஒரு  சிலர்   மீன்  கழிவுகளை   மட்டுமே  பிடித்து  வருவர்.  சிலர்  மீன்களோடு  பிடிப்படும்   சிறிய  குஞ்சு    களையும்,   கழிவு   மீன்களையும்    பிடித்து   வருவர்.

  நேற்று   கடலுக்கு    சென்ற   மீனவர்கள்    பலர்   சிறிய   அளவிலான    மத்தி ,  கவலை,   சூட,   குத்துவா,   பொருவா,   காரப்பொடிகள்,   மற்றும்   கடலில்   மிதந்த    மீன்   கழிவுகளையும்    கரைக்கு   கொண்டுவந்தனர்.

  இதில்   மீன்   கழிவுகளை    50   கிலோ    பெ ட்டி   ஒன்றுக்கு   ரூ   300/-  முதல்   ரூ  500/-   வரையிலும்    கோழித்த்தீவனத்திற்கு    அனுப்பிவைத்தனர்.

  ஓரளவு   நல்ல   மீன்களை   50   கிலோ   பெட்டி   ஒன்றுக்கு   ரூ  800/-  முதல்  ரூ  1000/-   ஏலம்  விட்டு   மீன்   எண்ணெய்   தயாரிப்புக்கு   அனுப்பி   வைத்தனர்.

  பின்னர்  அந்த   மீன்,   மீன் எண்ணெய்  மற்றும்   மீன்  பவுடர்கள்   பதப்படுத்தப்பட்ட   உணவு  மற்றும்   மருந்து  தயாரிப்புக்கு   அனுப்பிவைக்கப்படுகிறது.

  இந்த    வகை    கழிவு   மீன்கள்    சாதாரணமாக   காரைக்கால்   பகுதிகளில்   இருந்து   15  ஆயிரம்  கிலோ   முதல்   30   ஆயிரம்   கிலோ  வரை    நாள்   ஒன்றுக்கு   ஏற்றுமதி   செய்யப்படும்.

  நேற்று   ஒரே   நாளில்   சுமார்   82  டன்  (82  ஆயிரம்  கிலோ)   மீன்  கழிவுகள்    ஏற்றுமதி   செய்யப்பட்டன.

  இதன்  மதிப்பு   சுமார்   ரூ  1 கோடியே  25 லட்சம்   என   கணக்கிடப்பட்டுள்ளது.

  இத்தகைய    மீன்   குஞ்சுகள்   பிடித்தல்   தடை   செய்யப்பட்டுள்ளது.  இந்த   குஞ்சு   மீன்கள்   பிடிக்கப்படாமல்    கடலில்    வளர்ச்சியடைந்தால்   பல   கோடி  ரூபாய்     மதிப்பிலான    பெரிய    மீன்களாக  வளர்ந்து    மீனவர்களுக்கும்  பெரிய  வருவாயை  ஈட்டித்தரக்கூடியதாகவும்   மக்களுக்கு  சிறந்த  உணவாகவும்    ஆகக்கூடியவை.

  இதனால்   குஞ்சு   மீன்களை   பிடிக்க   கேரளாவில்   தடை  விதிக்கப்பட்டு   தடையை   மீறி   பிடித்த   மீனவர்களுக்கு    பெரும்  தொகை அபராதமாக    விதிக்கப்படுகிறது.    கேரளாவில்   உள்ள    கழிவு  மீன் மற்றும்        மீன்   குஞ்சுகளிலிருந்து   கோழித்தீவனம்   தயாரிக்கும்   நிறுவனங்களை    மூடி    வருகின்றனர்.

  அதே  போல்   தமிழகத்திலும்  மீன்  குஞ்சுகளை   பிடிப்பவர்களுக்கு   பெரும்  தொகை   அபராதமாக    விதிக்க   வேண்டும்   என்றும்   தீவன  தயாரிப்பு  நிறுவனங்களை   மூட   உத்திரவிடவேண்டும்   என்றும்   அரசுக்கு   மீனவர்  அமைப்புகள்  கோரிக்கை   விடுத்துள்ளனர்.

  கேரளாவை  போல்   தமிழகம்  புதுச்சேரியிலும்   குஞ்சு  மீன்களை  பிடிக்கும்  மீனவர்கள்   மீது    கடும்   நடவடிக்கை   எடுக்க   வேண்டும்    என்று  தேசிய   மீனவர்   பேரவை   தலைவரும்   புதுச்சேரி   முன்னாள்   சட்டமன்ற  உறுப்பினருமான   மா.   இளங்கோ    கோரிக்கை  விடுத்து   மனு  அளித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This