கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையத்துக்கு எதிரான மீனவர் போராட்டம் வாபஸ்

Forums Communities Fishermen கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையத்துக்கு எதிரான மீனவர் போராட்டம் வாபஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14765
    Inmathi Staff
    Moderator

    கடலூர்   மாவட்டம்   பரங்கிப்பேட்டை   அருகில்    கடந்த   100  நாட்களாக   அனல்  மின்   நிலையத்துக்கு  எதிராக    மீனவர்கள்   நடத்தி   வந்த   போராட்டம்   முடிவுக்கு   வந்தது.

    சிதம்பரம்  அருகே  பரங்கிப்பேட்டை அடுத்த  புதுக்குப்பத்தில்   கடந்த  ஜூலை   10  ஆம்  தேதி  முதல்   100  நாட்களாக   மீனவர்கள்  போராட்டம்  நடத்தி   வந்தனர்.

    கரிக்குப்பத்தில்   இயங்கி  வரும்   தனியார்  அனல்   மின்  நிலைய  நிலக்கரி    கையாளும்   பணிகளால்   தங்கள்  பகுதியில்   பெரும்   சுற்று   சூழல்   பாதிப்புகள்   ஏற்படுவதாகவும்    குடி    நீர்  காற்று  அனைத்தும்   பாழாகி   விடுவதாகவும்    புகார்   தெரிவித்து    போராடி    வந்தனர்.

    குழந்தைகள்   பள்ளிக்கூடத்தில்   நிம்மதியாக  படிக்க  முடியாத  சூழல்   ஏற்பட்டுள்ளதாகவும்,  மக்கள்  குற்றம்  சாட்டி   போராட்டத்தில்   ஈடுபட்டு  வந்தனர்.

    அந்த  தனியார்   அனல் மின்  நிலையத்துக்கு   தேவையான   நிலக்கரி   இறக்குமதி   செய்ய   துறைமுகம்  அமைக்கவும்   மீனவர்கள்  எதிர்ப்பு   தெரிவித்து  வந்தனர்.

    இத்தகைய  தங்கள்   கோரிக்கையை   வலியுறுத்தி   கடந்த  100  நாட்களாக   மீன்  பிடிக்க  செல்லாமல்    வேலை   நிறுத்தத்தில்   ஈடுபட்டு  வந்த   மீனவர்களிடம்   தொகுதி  சட்டமன்ற   உறுப்பினர்   பாண்டியன்   பேச்சுவார்த்தை    நடத்தினார்.

    இது குறித்து  ஆலோசனை   கூட்டம்  புதுக்குப்பம்  கிராமத்தில்  நடைபெற்றது.   மீனவர்களுக்கு    தேவையான   உதவிகளை   செய்து  தருவதாக   சட்டமன்ற   உறுப்பினர்    அவர்களுக்கு   உறுதி   அளித்தார்

    மீன்  பிடி  படகுகள்   கடலுக்கு   செல்ல    கடற்கரை   மணல்  பகுதிகளை    அகற்றி    வழி   செய்வதாக    உறுதி  அளித்தார்.

    இதை  அடுத்து   போராட்டத்தை  கைவிட்டு   மீன் பிடிக்க  கடலுக்கு  செல்வதாக   மீனவர்கள்  முடிவு  செய்தனர்.

    ஆலோசனை  கூட்டத்தில்    முன்னாள்  அமைச்சர்   செல்வி.  ராமஜெயம்,  பரங்கிப்பேட்டை   முன்னாள்  ஒன்றிய   குழு    தலைவர்   அசோகன்    உள்பட   பலர்   கலந்துகொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This