Forums › Communities › Fishermen › தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு :படகுகள் விரட்டியடிப்பு
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
அக்டோபர் 24, 2018 at 8:42 மணி #14763
Inmathi Staff
Moderatorதமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்க பட்டதோடு நூற்றுக்கணக்கான மீன்பிடி விசைபடகுகள் விரட்டியடிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினத்திலிருந்து நேற்று 132 மீன்படகுகளில் 600 க்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர் .
நேற்று இரவு நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர் .
ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் .அதிலிருந்த மீனவர்கள் செல்வம் (47) சின்னையா (50) சுப்பிரமணி (45) மாரிமுத்து (38) பழனி (30) ஆகிய 5 மீனவர்களை கைது செய்து , படகையும் பறிமுதல் செய்து அழைத்துச் சென்று காங்கேயன் துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை கடலுக்கு சென்று இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் .
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 30 க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி வலைகளை அறுத்து அடித்து விரட்டினார்கள் .
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வலைகளை இழந்து வெறுங்கையுடன் கரை திரும்ப நேர்ந்தது .
பல்லாயிரம் செலவு செய்து கடலுக்கு சென்ற மீனவர்கள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர் .
ஏற்கனவே 8 தமிழக மீனவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனையும் ரூ 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை எதிர் நோக்கி இலங்கை சிறையில் ரிமாண்ட் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் .
இந்த நிலையில் மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள பிரச்சனை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்திட உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் மத்திய , மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளன .
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.