தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு :படகுகள் விரட்டியடிப்பு

Forums Communities Fishermen தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு :படகுகள் விரட்டியடிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14763
    Inmathi Staff
    Moderator

    தமிழக   மீனவர்கள்   5  பேர்  இலங்கை   கடற்படையால்   சிறைபிடிக்க பட்டதோடு   நூற்றுக்கணக்கான    மீன்பிடி   விசைபடகுகள்   விரட்டியடிக்கப்பட்டன.

    புதுக்கோட்டை    மாவட்டம்    ஜெகதாப்  பட்டினத்திலிருந்து    நேற்று   132   மீன்படகுகளில்   600 க்கு    மேற்பட்ட   மீனவர்கள்    கடலில்   மீன்பிடிக்கச்   சென்றனர்  .

    நேற்று   இரவு   நெடுந்தீவு    அருகே   அவர்கள்   மீன் பிடித்து   கொண்டிருந்த  போது   அங்கு   ரோந்து   வந்த   இலங்கை  கடற்படையினர்   மீனவர்களை   விரட்டியடித்தனர்  .

    ஜெகதாப்பட்டினத்தைச்   சேர்ந்த   செல்வம்  என்பவருக்கு   சொந்தமான   விசைப்படகை    சுற்றி  வளைத்த    இலங்கை   கடற்படையினர்  .அதிலிருந்த   மீனவர்கள்   செல்வம்  (47)  சின்னையா  (50)  சுப்பிரமணி  (45)  மாரிமுத்து  (38)  பழனி  (30)   ஆகிய  5  மீனவர்களை   கைது   செய்து   , படகையும்   பறிமுதல்   செய்து  அழைத்துச்   சென்று    காங்கேயன்   துறையில்   விசாரணை    நடத்தி    வருகின்றனர் .

    இதேபோல்     ராமேஸ்வரத்திலிருந்து   நேற்று   அதிகாலை   கடலுக்கு   சென்று    இன்று   அதிகாலை   கச்சத்தீவு   அருகே   மீன்பிடித்துக்    கொண்டிருந்தனர்  .

    அங்கு  வந்த   இலங்கை   கடற்படையினர்    30 க்கும்    மேற்பட்ட   மீனவர்களின்    படகுகளை     சேதப்படுத்தி    வலைகளை   அறுத்து   அடித்து   விரட்டினார்கள்  .

    இதனால்   அச்சமடைந்த   மீனவர்கள்   வலைகளை   இழந்து   வெறுங்கையுடன்    கரை   திரும்ப   நேர்ந்தது  .

    பல்லாயிரம்   செலவு   செய்து   கடலுக்கு    சென்ற   மீனவர்கள்   பெரும்   நஷ்டம்    ஏற்பட்டுள்ளதாக      கரை   திரும்பிய    மீனவர்கள்   கண்ணீருடன்   தெரிவித்தனர்   .

    ஏற்கனவே   8  தமிழக   மீனவர்களுக்கு   3  மாதம்  சிறை  தண்டனையும்   ரூ 60   லட்சம்   அபராதமும்    விதிக்கப்பட்டுள்ளது.     மேலும்   16  மீனவர்கள்   கைது   செய்யப்பட்டு   தண்டனை   எதிர்   நோக்கி   இலங்கை   சிறையில்   ரிமாண்ட்   கைதிகளாக    அடைக்கப்பட்டுள்ளனர்  .

    இந்த   நிலையில்    மேலும்   5  மீனவர்கள்   கைது   செய்யப்பட்டுள்ள     பிரச்சனை    மீனவர்கள்   மத்தியில்   பெரும்   கொந்தளிப்பை   ஏற்படுத்தியுள்ளது  .

    இலங்கை  கடற்படையின்   இத்தகைய   நடவடிக்கைகளை  தடுத்திட   உரிய   உடனடி   நடவடிக்கை   எடுக்க  வேண்டும்   என்று   மீனவ   அமைப்புகள்   மத்திய ,  மாநில   அரசுகளை   கேட்டுக்கொண்டுள்ளன  .

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This