நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தர், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. நீதிபதிக்கு கொலை மிரட்டல் கொடுத்த நபர்கள் இதுவரை கைது செய்யப்படாததால் , வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு, நீதித்துறையில் வெளிநபர்கள் தலையிட கூடாது என்றும், அதனை தாங்களே பார்த்துகொள்வோம் எனக் கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல்