ஆறுமுகசாமி ஆணையத்தில், ராமமோகன ராவ் 3வது முறையாக ஆஜர்

Forums Inmathi News ஆறுமுகசாமி ஆணையத்தில், ராமமோகன ராவ் 3வது முறையாக ஆஜர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14756
    Kalyanaraman M
    Keymaster

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், மூன்றாவது முறையாக ஆஜராகியுள்ளார்.
    ஜெயலலிதா உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை அப்போது தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதி செய்து அனுப்பி வைத்ததாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுகுறித்த விசாரணைக்காக ராமமோகன ராவ், மூன்றாவது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் மேத்தீவ் சாமுவேல் ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராகினர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This