Forums › Communities › Fishermen › கடலில் இருக்கும் மீனவர்களை தொடர்பு கொள்ள சாகரா புதிய செயலி கேரளாவில் அறிமுகம்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 6 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
அக்டோபர் 23, 2018 at 8:17 மணி #14728
Kalyanaraman M
Keymasterகடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களின் இருப்பிடம் மற்றும் மீனவர்களிடம் அவர்களை பற்றிய விவரம் மற்றும் அடுத்து பயணிக்கவிருக்கம் மீன் பிடி களம் பற்றிய விவரங்களை சேகரிக்க மீனவர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய “சாகரா” என்ற மொபைல் போன் செயலி (App) ஒன்றை கேரளா அரசு மீன்வளத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
சாகரா செயலியின் மூலம் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கருதும் கேரள அரசு கடற்கரை மாவட்டம் தோறும் இந்த செயலியை மீனவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
கொச்சின் மாவட்டம் தோப்புமாபடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செயலி தொடக்க விழா நிகழ்ச்சியில் கொச்சின் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. ஜே. மேக்சி தொடங்கி வைத்தார்.
இந்த செயலி மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று கேரளா அரசு கருதுகிறது. இந்த செயலி மூலம் மீனவர்கள் தங்கள் படகில் உள்ள மீனவர்களைப்பற்றிய தகவல்கள், அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடம், அவர்கள் அடுத்து செல்லவிருக்கும் தூரம் சென்று, மீன் பிடிக்க உத்தேசித்துள்ள களம் அதற்கு ஆகக்கூடிய நேரம், அவர்கள் கரை திரும்ப உத்தேசித்துள்ள நாள், நேரம் போன்றவற்றை மீன்வளத்துறை மாவட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்க இயலும் என்று கருதுகின்றனர்.
அதன் மூலம் மாவட்ட மீனவளத்துறை அதிகாரிகள் மீனவர்களை கண்காணித்து அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது மீனவர்களை மீட்க முடியும் என்று கருதுகின்றனர்.
கேரளா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்த செயலி அறிமுகப்படுத்த பட்டாலும் பெரும்பாலான மீனவர்கள் செயலியை பெறாததால், அதனை மீனவர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 1,600 படகுகள் உள்ள ஒரு மாவட்டத்தில் 350 படகுகளில் மட்டுமே செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்றும் இதனால் மாவட்டம் தோறும் மீன் பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களில் செயலியின் பயன்பாடு குறித்து விளக்கும் பயிற்சி வகுப்புகளும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்த மீன்வளத்துறை ஏற்பாடு செய்து வருவதாகவும் மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கேரள மாநில மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் மீன் வளத்துறையில் “ரியல் கிராப்ட் ” என்ற மென்பொருள் மூலம் பதிவு செய்து கொண்டு தங்கள் படகுக்குரிய “லாகின் ஐடியை” பெற்று கொள்ள வேண்டும். அத்துடன் விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கொண்டால் மீன்வளத்துறையுடன் தொடர்பு கொண்டு தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பது சாத்தியமாகும் என்றும் மீனவர்களின் பாதுகாப்புக்கு உதவும் என்றும் இது குறித்து விவரம் தெரிவித்த கொச்சின் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.