கடலில் இருக்கும் மீனவர்களை தொடர்பு கொள்ள சாகரா புதிய செயலி கேரளாவில் அறிமுகம்

Forums Communities Fishermen கடலில் இருக்கும் மீனவர்களை தொடர்பு கொள்ள சாகரா புதிய செயலி கேரளாவில் அறிமுகம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14728
    Kalyanaraman M
    Keymaster

    கடலில்  மீன்  பிடித்து  கொண்டிருக்கும்  மீனவர்களின்  இருப்பிடம்  மற்றும்  மீனவர்களிடம்  அவர்களை  பற்றிய  விவரம்  மற்றும்  அடுத்து  பயணிக்கவிருக்கம்   மீன்  பிடி   களம்  பற்றிய  விவரங்களை  சேகரிக்க  மீனவர்களுடன்   தொடர்பு   கொள்ளும்   புதிய   “சாகரா”  என்ற  மொபைல்  போன்  செயலி  (App) ஒன்றை  கேரளா  அரசு  மீன்வளத்துறை  அறிமுகப்படுத்தியுள்ளது

    சாகரா  செயலியின்   மூலம்   கடலில்   மீன்   பிடித்து  கொண்டிருக்கும்   மீனவர்களின்   பாதுகாப்பை   உறுதி   செய்ய    முடியும்    என்று    கருதும்   கேரள   அரசு    கடற்கரை  மாவட்டம்   தோறும்   இந்த   செயலியை   மீனவர்களுக்கு    அறிமுகம்    செய்யும்    நிகழ்ச்சியை   நடத்தி   வருகிறது.

    கொச்சின்  மாவட்டம்  தோப்புமாபடியில்  நடைபெற்ற  மாவட்ட  அளவிலான  செயலி  தொடக்க  விழா  நிகழ்ச்சியில்  கொச்சின்  பகுதி சட்டமன்ற   உறுப்பினர்   கே.  ஜே.  மேக்சி   தொடங்கி   வைத்தார்.

    இந்த  செயலி  மூலம்  மீனவர்களுக்கு பாதுகாப்பு  கிடைக்கும்  என்று  கேரளா   அரசு   கருதுகிறது.   இந்த   செயலி  மூலம்   மீனவர்கள்   தங்கள்  படகில்   உள்ள   மீனவர்களைப்பற்றிய   தகவல்கள்,    அவர்கள்   மீன்  பிடித்துக்   கொண்டிருக்கும்   இடம்,   அவர்கள்  அடுத்து  செல்லவிருக்கும்  தூரம்   சென்று,   மீன் பிடிக்க   உத்தேசித்துள்ள   களம்   அதற்கு     ஆகக்கூடிய  நேரம்,     அவர்கள்   கரை  திரும்ப  உத்தேசித்துள்ள  நாள், நேரம்  போன்றவற்றை    மீன்வளத்துறை   மாவட்ட   அலுவலகத்துக்கு   தெரிவிக்க  இயலும்   என்று   கருதுகின்றனர்.

    அதன்  மூலம்  மாவட்ட  மீனவளத்துறை  அதிகாரிகள்  மீனவர்களை  கண்காணித்து   அவர்களுக்கு  அவசர  உதவி  தேவைப்படும்போது  மீனவர்களை   மீட்க   முடியும்    என்று   கருதுகின்றனர்.

    கேரளா  மாநிலத்தில்   சில  மாதங்களுக்கு  முன்பு   இந்த  செயலி  அறிமுகப்படுத்த  பட்டாலும்   பெரும்பாலான  மீனவர்கள்  செயலியை     பெறாததால்,   அதனை    மீனவர்களிடம்   கொண்டு   செல்ல    நடவடிக்கை   எடுக்கப்பட்டு   வருவதாகவும்    மீன்வளத்துறை    அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக   1,600  படகுகள்    உள்ள   ஒரு   மாவட்டத்தில்  350  படகுகளில்  மட்டுமே   செயலியை   பயன்படுத்த  தொடங்கியுள்ளனர்   என்றும்    இதனால்  மாவட்டம்  தோறும்   மீன்  பிடி  துறைமுகங்கள்   மற்றும்  மீன்  இறங்கு   தளங்களில்   செயலியின்   பயன்பாடு  குறித்து   விளக்கும்  பயிற்சி  வகுப்புகளும்,   விழிப்புணர்வு   பிரச்சாரங்களும்   நடத்த  மீன்வளத்துறை   ஏற்பாடு  செய்து   வருவதாகவும்   மீன்வளத்துறை  அதிகாரி  ஒருவர்   தெரிவித்தார்.

    கேரள  மாநில  மீன்பிடி  விசைப்படகுகள்  அனைத்தும்  மீன் வளத்துறையில்   “ரியல்  கிராப்ட் ” என்ற  மென்பொருள்  மூலம்   பதிவு  செய்து கொண்டு   தங்கள்   படகுக்குரிய    “லாகின்  ஐடியை” பெற்று  கொள்ள வேண்டும்.  அத்துடன்  விசைப்படகு  உரிமையாளர்கள்   தங்கள்  மொபைல் எண்களை  பதிவு  செய்து கொண்டால்   மீன்வளத்துறையுடன்   தொடர்பு  கொண்டு  தகவல்களை   அவ்வப்போது  தெரிவிப்பது   சாத்தியமாகும்    என்றும்   மீனவர்களின்    பாதுகாப்புக்கு   உதவும்    என்றும்   இது   குறித்து    விவரம்   தெரிவித்த    கொச்சின்  மாவட்ட  மீன்வளத்துறை   அதிகாரி   கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This