Forums › Communities › Fishermen › உலக சிறு மீன்வள 3 வது மாநாடு: 50 நாடுகளின் 300 பிரதிநிதிகள் பங்கேற்பு
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 3 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
October 23, 2018 at 8:14 pm #14726
Kalyanaraman M
Keymasterஉலக சிறு தொழில் மீன்வள பிரதிநிதிகளின் 3 வது மாநாடு தாய்லாந்து நாட்டில் 50 நாடுகளின் 300 பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
உலக சிறு மீன்வள 3 வது மாநாடு (3rd world small scale fisheries Conference) வருகின்ற அக்டோபர் 22 முதல் 26 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தாய்லாந்து நாட்டின் சியாங்மை நகரில் நடைபெறவிருக்கிறது.
சிறு மீன் பிடித்தலுத்துக்கான எதிர்காலத்திற்கு தேவையான கட்டுப்பாடு மாற்றம் மற்றும் நீடித்த வாழ்வாதாரத்துக்கான யுக்திகள் பற்றி பரஸ்பரம் கலந்து பேசி முடிவெடுக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 50 நாடுகளின் சிறு தொழில் மீனவர்கள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் பொது மக்களுக்கான அமைப்புகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் 300 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
உலகத்தின் மக்கள் தொகையில் பல கோடி பேர்களுக்கு உணவுக்கான தேவையை பூர்த்தி செய்வதுடன் கோடிக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் சிறு தொழில் மீன் பிடிப்பு விளங்குகிறது. ஆனால் சரியான பங்கீடு இல்லாத மீன் பிடி உரிமை, நிர்வாக திறமையின்மை, இயந்திரமையமாக்கப்பட்ட பெரும் தொழில் மீன்பிடித்தலும், மீன்பிடி களத்துக்கான போட்டா, போட்டி, பருவ நிலை மாற்றும் போன்ற வற்றால் சிறு மீன் பிடி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் அவைகளை களைதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
மெய்ஜோ பல்கலைக்கழகம், தாய்லாந்து மீன்வளத்துறை, தென்கிழக்கு ஆசிய மீன்வள மேம்பாட்டு மையம், கெய்சேட்சரி பல்கலைக்கழகம், மகிதால் பல்கலைக்கழகம், தாய்லாந்து கடல் விஞ்ஞான அசோசியேஷன் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agricultural Organisation) பிரதிநிதி டாக்டர் நிக்கோல் பிரான்ஸ், உலக மீனவர் மற்றும் மீன்பிடி தொழிலாளர் பேரவை (World Forum of fish harvesters and fish workers) டாக்டர் எதிரூத் ஸ்டீபன் லூக்காஸ்கா, நார்வே ஆர்க்டிக் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஸ்வெயின் ஜென்டோப் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சிறு மீனவர்களுக்காக நீடித்த தொழில் ஆதாரத்துக்கு வழிவகுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.