நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

Forums Communities Fishermen நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14724
  Kalyanaraman M
  Keymaster

  நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றன.நாகை மாவட்டம் புஷ்பவனம் அருகேயுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று காலை கடலுக்குள் நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுடன், 5 நாகை மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

  இதேபோல், புதுக்கோட்டை  மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து  நேற்று  மீன்  பிடிக்க  சென்ற மீனவர்களாக செல்வம், பழனி, சுப்ரமணி உள்ளிட்ட 5  பேரை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி  மீன்  பிடித்ததாகக்  ஒரு  விசைபடகுடன் கைது  செய்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This