தென்னை வாடல் நோய் கட்டுப்படுத்த வழி

Forums Communities Farmers தென்னை வாடல் நோய் கட்டுப்படுத்த வழி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14717
    Inmathi Staff
    Moderator

    தென்னை வாடல் நோய்: பாதிக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சி குன்றியும், ஓலைகளின் அளவு சிறுத்தும், மஞ்சள் நிறமாக மாறிக் காய்ந்தும் விடுகின்றன. விளைச்சல் 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு, மரத்தின் உச்சிப் பகுதி குறைந்துவிடுகிறது. இதனால், காய்க்கும் திறன் வெகுவாகக் குறைந்து இறுதியில் மரங்கள் காய்ந்தேவிடுகின்றன.

    தடுக்கும் முறைகள்

    இந்த நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து, மடக்கி உழவு செய்ய வேண்டும்.

    ஒரு மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5 கிலோ மண்புழு உரம் இட வேண்டும். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ பொட்டாஷ் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.

    ஹெக்சா கோணோசோல் ஒரு மில்லி அல்லது ஆரியோபஞ்சின் 2 கிராம் மற்றும் மயில்துத்தம் ஒரு கிராம் – இதில் ஏதாவது ஒன்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும்.

Viewing 1 post (of 1 total)

கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This