கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். இரணியல் அருகே முக்கலம்பாடு குளத்தின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை, இரணியல் போலீசார் மீட்டனர்.
விசாரணையில், அவர் கடேற்றியைச் சேர்ந்த விஜீஸ் என்பதும், பக்கத்து வீட்டில் வசித்த சிந்து என்ற பெண்ணை அவரது வீட்டாரின் சம்மதமின்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், குளத்தில் மீன் பிடிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் அவரது நண்பரான நெல்சன் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நெல்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.