18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் குறித்த தீர்ப்பு எப்படி இருந்தாலும், 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நீடிக்கும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
நெல்லை குறுக்குதுறை முருகன் கோவில் தாமிரபரணி நதியில் மகா புஷ்கர விழாவையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியை தொடர்ந்து நடத்துவதற்கான முழு ஆதரவு தங்களிடம் உள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான அவசியம் இல்லாததால், நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே நடைபெறும் என்றார்.