வணிகர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

Forums Inmathi News வணிகர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14667
  Kalyanaraman M
  Keymaster

  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணாத பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி சட்டத்தின் முறையற்ற செயல்பாடு, சுங்கக் கட்டண உயர்வு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழில்கள் முடக்கம் என நாட்டின் பொருளாதாரம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

  இந்த சூழ்நிலையில், மத்திய – மாநில அரசுகளால், சிறு – குறு வணிகர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், அக்டோபர் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This