தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Forums Inmathi News தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14666
  Kalyanaraman M
  Keymaster

  தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

  பாவளிக்குச் சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்து சேவையை அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள், மதுரவாயல் – தாம்பரம் – பெருங்களத்தூர் வழித்தடங்களைத் தவிர்த்துச் செல்லும். அதற்கு பதில் நசரத் பேட்டை- அவுட்டர் ரிங் ரோடு – வண்டலூர் வழியாக ஊரப்பாக்கத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  விக்ரவாண்டி-பண்ருட்டி-திருவண்ணாமலை வழித்தட பேருந்துகள் மட்டும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு முன்பதிவு கவுன்டர்கள் உள்ளன. இந்த மாற்றங்களுக்கேற்ப நவம்பர் 3 முதல் 5 வரை தனி வாகனங்களில் செல்பவர்களும், பேருந்து பயணிகளும் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This