சென்னையில் டெங்குக்கு இரட்டைக் குழந்தைகள் பலி

Forums Inmathi News சென்னையில் டெங்குக்கு இரட்டைக் குழந்தைகள் பலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14651
  Inmathi Staff
  Moderator

  சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 7 வயதான இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் – கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடும் காய்ச்சல் இருந்துள்ளது. மருந்துகள் சாப்பிட்டும், காய்ச்சல் குறையாததை அடுத்து, 3 நாட்களுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This