நீதிமன்ற அவதூறு: உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எச்.ராஜா

Forums Inmathi News நீதிமன்ற அவதூறு: உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எச்.ராஜா

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14646
    Inmathi Staff
    Moderator

    நீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்த ஹெச்.ராஜா, சென்னை உயர்நீதிமன்றம் குறித்துத் தரக்குறைவாகப் பேசிய காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியது. இது குறித்துச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ததுடன், ஹெச்.ராஜா அக்டோபர் 22 ஆம் நாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஹெச்.ராஜார ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நீதிமன்றம் குறித்து கருத்துத் தெரிவித்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், வாய்தவறிக் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்ற நீதிபதிகள், எச்.ராஜாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This