தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும், மாநில நெடுஞ்சாலைத் திட்டத்தையும் ஒப்பிடுவது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் – செங்கப்பள்ளி சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 கோடியே 65 லட்சம் ரூபாய் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால், 12 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக கூறப்படுவது தவறு என குறிப்பிட்டுள்ள அவர், ஒரு கிலோ மீட்டருக்கு எத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பீடு செய்வதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல அம்சங்களை பார்ப்பதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
நான்குவழிசாலையா, ஆறு வழிச்சாலையா, எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது போன்றவை ஆராயப்படுவதாக கூறியுள்ள டி.ஆர்.பாலு, வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்