காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்றும், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சியும் மூழ்கும் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை, திமுகவே காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது சந்தேகம் தான் என்று கூறினார். ராகுல் காந்தி உடனான கமல்ஹாசனின் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, கமல் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும் என்று பதில் அளித்தார்.