சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினியின் கருத்து, அவரது தெளிவின்மையை காட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆரோக்கிய வாழ்வு குறித்த சைக்கிள் பேரணியை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதரீதியான விவகாரங்களில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என தெரிவித்தார்.