சென்னை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி மணல் விநியோகம் பணிகள் தொடங்கியது

Forums Inmathi News சென்னை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி மணல் விநியோகம் பணிகள் தொடங்கியது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14599
  Kalyanaraman M
  Keymaster

  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை சென்னை துறைமுகத்தில் இருந்து விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. மலேசியாவில் இருந்து 56,750 மெட்ரிக் டன் மணலை தமிழக பொதுப்பணித்துறை இறக்குமதி செய்தது. அந்த மணல் கடந்த மாதம் 23ம் தேதி சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு தனியார் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு துறைமுகத்தில் உள்ள வணிகவளாக கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநாட்டு மணலுக்கான விலை ஒரு யூனிட் ரூ.10,500 என நிர்ணயிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

  இதையடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்து விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் மணல் விநியோகம் செய்யப்படுகிறது. மணலை எடுத்து செல்ல காமராஜர் துறைமுகத்தில் வரிசையாக மணல் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த மணல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மணல் தட்டுப்பாடு நீங்கி, மணலின் விலையும் குறையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This