டிசம்பர் 12ல் கட்சி குறித்து அறிவிப்பு இருக்காது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டிசம்பர்,12 ல் கட்சி குறித்து அறிவிப்பு இருக்காது. கட்சி துவங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நேரம், காலம் பார்த்து கட்சி துவக்கப்படும். ‘மீடூ ‘ விவகாரம் பெண்களுக்கு சாதகமானது. அதனை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது.சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஐதீகம், சடங்கு இருக்கும். அதில், தலையிடாமல் இருப்பதே நல்லது. பாராளமன்ற தேர்தல் வரும்போது எனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கிறேன் என்று கூறினார்.