வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம்

Forums Inmathi News வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14594
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு வாரம் தாமதம் ஆகலாம். அக்டோபர் 26ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 16 செ.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ., சென்னை அச்சிரப்பாக்கத்தில் 6 செ.மீ., சங்கரன்கோவிலில் 5 செ.மீ., மழை பதிவானது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This