விஜயதசமியான இன்று வித்யாரம்பம் என்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விஜயதசமியான இன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகள் இன்று திறந்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் இன்று காலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். தட்டில் அரிசியை பரப்பி, அதில் தமிழின் முதல் எழுத்தாம் “அ” என்ற உயிரெழுத்தை எழுதவைத்து தங்க குச்சி மூலம் நாக்கிலும் எழுதினார்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.