அனுமதியின்றி தங்கு கடல் மீன் பிடிப்புக்கு சென்ற 28 விசைப்படகுகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள், நாட்டு படகுகள் எந்தெந்த இடங்களில் மீன் பிடிக்க வேண்டும் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அவர்களுக்குறிய நாட்களில் மீன்வளத்துறையின் அலுவலகத்தில் அனுமதி பெற்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உரிய அனுமதியின்றி கடலில் தங்கி மீன் பிடிக்கச்சென்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 28 விசைப்படகுகள் கரைக்கு திரும்பியவுடன் அந்த படகுகளின் மீன் பிடி உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் அந்த மீனவர்கள் மீன் பிடிக்க நிரந்தர தடை விதிக்க படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.