தடையை மீறி மீன் பிடித்த 390 மீனவர்களுக்கு சிறை

Forums Communities Fishermen தடையை மீறி மீன் பிடித்த 390 மீனவர்களுக்கு சிறை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14493
  Inmathi Staff
  Moderator

  நமது  அண்டை  நாடான  பங்களாதேஷில்  மீன்  உற்பத்திக்காக  விதிக்கப்பட்ட   22  நாட்களுக்கான   மீன்பிடி   தடை   காலத்தில்  தடையை  மீறி   மீன்   பிடித்த  390  மீனவர்கள்   சிறையில்   அடைக்கப்பட்டனர்.

  பங்களாதேஷ்   நாட்டில்  கடல்   ஆறுகள்,   மற்றும்   நீர்   நிலைகளில்  மீன்   இனவிருந்திக்காக   அக்டோபர்   7  ஆம்  தேதி  முதல்   22  நாட்கள்  மீனவர்கள்   மீன்   பிடிக்க   தடை   விதிக்கப்பட்டுள்ளது.

  அந்நாட்டின்   பாரிசால்  மண்டலத்தில்  உள்ள  6 மாவட்டங்களின்  பல்வேறு   பகுதிகளில்   கடலிலும்   ஆறுகளிலும்   ஐலிஷ்  என்ற   வகை  மீன்களை   பிடித்ததாக   390  மீனவர்கள்   கைது  செய்யப்பட்டு   அவர்களுக்கு   சிறை   தண்டனை   வழங்கப்பட்டது.

  மீனவர்களிடமிருந்து  கடந்த  10  நாட்களில்  மட்டும்   14  ஆயிரம்  மீட்டர்   நீளமுள்ள   சட்ட   விரோத    வலைகளும்,    3,200  கிலோ  மீன்களும்  பறிமுதல்  செய்யப்பட்டு   அபராதமாக   அந்நாட்டு   மதிப்பில்   5  லட்சத்தி   27 ஆயிரத்து  900  மதிப்பிலான   அபராதமும்   விதிக்கப்பட்டுள்ளதாக  மீன்வளத்துறை    உதவி    இயக்குனர்   அசீசூர்   ரஹ்மான்   தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This