நமது அண்டை நாடான பங்களாதேஷில் மீன் உற்பத்திக்காக விதிக்கப்பட்ட 22 நாட்களுக்கான மீன்பிடி தடை காலத்தில் தடையை மீறி மீன் பிடித்த 390 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பங்களாதேஷ் நாட்டில் கடல் ஆறுகள், மற்றும் நீர் நிலைகளில் மீன் இனவிருந்திக்காக அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 22 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பாரிசால் மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடலிலும் ஆறுகளிலும் ஐலிஷ் என்ற வகை மீன்களை பிடித்ததாக 390 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மீனவர்களிடமிருந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள சட்ட விரோத வலைகளும், 3,200 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக அந்நாட்டு மதிப்பில் 5 லட்சத்தி 27 ஆயிரத்து 900 மதிப்பிலான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அசீசூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.