கேரளா புதிய முயற்சி:மீனவபெண்கள் தயாரிக்கும் கருவாடு 1000 மையங்களில் விற்பனை

Forums Communities Fishermen கேரளா புதிய முயற்சி:மீனவபெண்கள் தயாரிக்கும் கருவாடு 1000 மையங்களில் விற்பனை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14489
  Inmathi Staff
  Moderator

  கேரளா  மாநில  மீனவ  பெண்கள்  அமைப்பின்  மூலம்  கருவாடு  தரமானதாகவும்   சுகாதாரமானதாகவும்   தயாரித்து  1000 விற்பனை மையங்கள்  மூலம்   விற்பனைக்கு   கொண்டுவரப்படவுள்ளது.

  கேரளாவில்  மீனவ  பெண்களின்  வாழ்வாதாரத்தை  உயர்த்தும்  நோக்கத்துடன்  உருவாக்கப்பட்டுள்ள  மீனவ பெண்களுக்கான  உதவி  சொசைட்டி  (Society for Assistance to fisher women)  என்ற  அமைப்பின்  மூலம்   சுகாதாரமான   முறையிலும்,   தரமானதாகவும்   தயாரிக்கப்படவுள்ள  கருவாடு   வகைகளை   “தீரமைத்ரி”    என்று   (Brand)  வணிக  பெயரிடப்பட்டு  1000 விற்பனை   மையங்களில்  விற்பனைக்கு கொண்டுவரபடவுள்ளது.

  இதன்  முதல்    விற்பனையை  கேரளா  மாநில  மீன்வளத்துறை  அமைச்சர்   திருமதி  மெர்சி  குட்டி  அம்மா   நாளை  (வெள்ளிக்கிழமை) கொச்சின்   நகரில்   தொடங்கி   வைக்கிறார்.

  கேரளா   மாநிலத்தில்   இயங்கும்   மீனவ   பெண்களால்   நடத்தப்படும்  145  மீன்   பதப்படுத்தும்  சிறு  நிறுவனங்கள்,    கேரளா   மாநிலத்தில்   பிடிக்கப்படும்   மீன்களை   கொள்முதல்   செய்து   உப்பிடப்பட்ட    6  வகையான  கருவாடுகளை   தயாரித்து   விற்பனைக்கு   வழங்குவார்கள்

  இந்த   6  வகை  கருவாடுகளும்   ஒரே  வணிகமுத்திரை   (Brand Name)  யுடன்   விற்பனைக்கு   வரும்.

  சுகாதாரமான   முறையில்    தரமாக   கருவாடுகளை  தயாரித்து  வழங்க  மீனவ பெண்களுக்கு பயிற்சியும்  தேவையான    கருவிகளும்,   உலர்த்தும்    இயந்திரங்களும்,   மீனவ   பெண்களுக்கான   உதவும்  சொசைட்டி   (SAF)  மூலம்   வழங்கப்படும்   என்று   அந்த   அமைப்பின்  நிர்வாக   இயக்குனர்   என். எஸ். ஷ்ரீலா    தெரிவித்துள்ளார்.

  புதிய  வர்த்தக  முத்திரையுடன்  விற்பனைக்கு  வரும்  என்றும்  கேரளாவில்  உள்ள  மால்கள்,  சூப்பர்  மார்கெட்டுகள்  உள்ளிட்ட  1000 கடைகளில்  விற்பனை  செய்ய   நடவடிக்கை   எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2004  ஆம்  ஆண்டு   ஏற்பட்ட   சுனாமி   தாக்குதலால்   வருவாய் இழந்த மீனவ பெண்களுக்கு  தொழில்நுட்பம்  மற்றும்  பொருளாதார  உதவிகளை  வழங்குவதற்காக  தொடங்கப்பட்ட  நிறுவனம்  தற்போது இத்தகைய   விற்பனை   முயற்சியில்   இறங்கியுள்ளது.

  இதன்   தொடர்ச்சியாக,   மீன்   ஊறுகாய்   உள்பட  இன்னும்  கூடுதலான  மீன்  உணவு  பொருட்களும்  உற்பத்தி  செய்யப்பட்டு  விற்பனைக்கு   வரும்  என்று   அந்நிறுவனத்தின்  சார்பில்   அறிவிக்கப்பட்டுள்ளது.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This