12 நாள் வேலைநிறுத்தம் முடிந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

Forums Communities Fishermen 12 நாள் வேலைநிறுத்தம் முடிந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14466
    Inmathi Staff
    Moderator

    கடந்த  12 நாட்களாக  வேலை  நிறுத்தத்தில்  ஈடுபட்டு  கடலுக்கு  மீன் பிடிக்க  செல்லாமல்  பல்வேறு  போராட்டங்களில்  ஈடுபட்டு  வந்த  தமிழகத்தின்   6   மாவட்ட   மீனவர்கள்   வேலை   நிறுத்தத்தினை   முடிவுக்கு   கொண்டுவந்து      கடலுக்கு   மீன்   பிடிக்கச்   சென்ற போது இலங்கை  கடற்படையினரால்  விரட்டியடிக்கப்பட்டனர்.

    தமிழகத்தின்   நாகப்பட்டினம்,  ராமநாதபுரம்,  புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,   திருவாரூர்   மற்றும்   காரைக்கால்   மாவட்ட   மீனவர்கள்   தினம்  தினம்  ஏறி  வரும்  டீசல்  விலை  உயர்வை  கண்டித்தும்,  மீனவர்களின்  வாழ்வாதாரத்துக்கான   முதன்மையான   மூல    பொருளான   டீசலை   மத்திய  அரசின்   வரிகள்   ஏதுமின்றி   அசல்  விலைக்கே   வழங்க   வேண்டும்   என்று  கோரியும்,  இலங்கை  கடற்  கொள்ளையர்களின்  தாக்குதலில்  இருந்து  தமிழக  மீனவர்களை  காப்பாற்ற  நடவடிக்கை  எடுக்க  கோரியும்  கடந்த  3 ஆம்  தேதியில்   இருந்து   கடலுக்கு   மீன் பிடிக்க  செல்லாமல்  வேலை  நிறுத்தத்தில்   ஈடுபட்டு   வந்தனர்.

    ஆங்காங்கே   மாவட்ட   ஆட்சியர்   அலுவலகம்  முன்பு  உண்ணா  விரதம்  ஆர்ப்பாட்டம்  நடத்தியும்  நாகையில்  ரோடு  மறியல்  நடத்தியும்  போராட்டங்களில்   ஈடுபட்டு  வந்தனர்.

    மாவட்ட  ஆட்சியர்கள், மீன்வளத்துறை  அதிகாரிகள்,   ஆங்காங்கே  மாவட்ட  அளவில்   மீனவ   பிரதிநிதிகளுடன்   நடத்திய  பேச்சுவார்த்தைகளை    தொடர்ந்து   ஞாயிற்றுக்கிழமையுடன்    போராட்டத்தை   நிறுத்திக்கொள்வது   என்று   முடிவு    செய்யப்பட்டது.

    திங்கட்கிழமை  கடலுக்கு   மீன்    பிடிக்க   செல்வது   என்று  எடுக்கப்பட்ட    முடிவின்படி   6  மாவட்ட   மீனவர்களும்   கடலுக்கு  மீன் பிடிக்கச்  சென்றனர்.   12   நாட்கள்     நடந்த    வேலை   நிறுத்தம்    முடிவுக்கு  வந்த பின்னர்  நேற்று  முன்தினம்  கடலுக்கு  நூற்றுக்கணக்கான  படகுகளில்  மீன்  பிடிக்கச்  சென்ற தமிழக  மீனவர்களை  நெடுந்தீவு  அருகே  இலங்கை  கடற்படையினர்  விரட்டி  அடித்துள்ளனர்.

    மீனவர்கள்  வருவாய்  ஏதுமின்றி  கரை  திரும்பினர் .  இந்திய  கடல்  எல்லைக்குள்  நுழைந்து  இலங்கை  கடற்படையினர்  தாக்குதல்  நடத்தி  விரட்டி  அடித்ததாக  ராமேஸ்வரம்  மீனவர்கள்  தெரிவித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This