கேன் குடிநீர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை: கேன் உற்பத்தியாளர்கள் சங்கம்

Forums Inmathi News கேன் குடிநீர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை: கேன் உற்பத்தியாளர்கள் சங்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14453
    Kalyanaraman M
    Keymaster

    சென்னை மற்றும் புறநகரில் கேன் குடிநீர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை என்று தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குவதால் சென்னை மற்றும் புறநகரில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அங்சங்கத்தின் பொது செயலாளர் இலங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னைக்குள் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

    சென்னையில் வெறும் 5% பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் விரைவில் சரிசெய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு தான் பிரச்சனை ஏற்படும் என்றும் நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் இலங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This