தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Forums Inmathi News தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14444
    Kalyanaraman M
    Keymaster

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 18-8-2018-ம் தேதி கடலுக்குச் சென்றனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

    பின்னர் 8 பேரும் கல்பெட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அந்த வழக்கு விசாரணை வந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களில் 8 மீனவர்களுக்கு ரூ. 60 லட்சம் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைவாசம் அளிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அநியாய அபராதத்தினை ரத்து செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This