வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.