கடந்த 2016ல் சென்னையை தாக்கிய வர்தா புயலின் போது, சென்னையில் 9 பேர் மாயமாகி உள்ளதாக சென்னை ஆட்சியர் அறிவித்து உளளார்.
மேலும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு மற்றும் விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவிசெல்வன், நிர்மல்ராஜ், வினோத், ராஜேந்திரன், மாதவேல், சிவா, ராயபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ், ஆந்திராவை சேர்ந்த கொண்டூரு மல்லிகா அர்ஜூனா, வெங்கட்ராமன் ஆகியோரை காணவில்லை எனவும், மாயமானவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 15 நாளில் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.