காரைக்கால் மீனவ சமுதாய தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பஞ்சவர்ணம் மறைவு

Forums Communities Fishermen காரைக்கால் மீனவ சமுதாய தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பஞ்சவர்ணம் மறைவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14358
  Inmathi Staff
  Moderator

  மீனவ  சமுதாய  மூத்த  தலைவரும், காரைக்கால்   மாவட்ட   முன்னாள்   சட்டமன்ற  உறுப்பினருமான ஜி. பஞ்சவர்ணம்  (68)  இன்று   காலை   சென்னையில்   மருத்துவமனையில்   காலமானார்.

  உடல்   நல   குறைவு   காரணமாக   சென்னை   கே.கே.  நகரில்   உள்ள இ.எஸ்.ஐ   மருத்துவமனையில்   சிகிச்சை   பெற்று   வந்த   அவர்   இன்று  காலை   6.10  மணிக்கு   இயற்கை   எய்தினார்.

  அவருடைய  உடல்  தற்பொழுது  சென்னையில்  இருந்து  காரைக்கால்  கொண்டு  செல்லப்படுகிறது  1980 – 1983  ஆண்டுகளில்   காரைக்கால்  கோட்டுச்சேரி   தொகுதி  சட்டமன்ற   உறுப்பினராக   இருந்தார்.   தி. மு. கவில்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்த  அவர்  மீனவ  சமுதாய  மூத்த  தலைவர்களுள்   ஒருவர்.

  மீனவ  சமுதாயத்தை  பழங்குடியினராக  அங்கீகரிக்க  கோரி  முன்னாள்  சட்டமன்ற  உறுப்பினர்  மா. இளங்கோ  தலைமையில்   1996 ஆம்   ஆண்டில்   டெல்லியில்   அப்போதைய   பிரதமர்  தேவகவுடா   அவர்களை   சந்தித்து   வலியுறுத்திய   40  பேர்   கொண்ட   மீனவ   சமுதாய   பிரதிநிதிகள்   குழுவில்   இடம் பெற்று   இருந்தார்.

  அவருக்கு   சரோஜா  என்ற  மனைவியும் பார்த்திபன்,   வெற்றிச்செல்வன், திருக்குமரன். என்று 3 மகன்களும்,  கனிமொழி, தேன்மொழி   என்று   இரண்டு   மகள்களும்   உள்ளனர்.

  காரைக்கால்  அக்கம்பேட்டை  கடற்கரை  கிராமத்தைச்   சேர்ந்த   அவர்   தற்பொழுது   கோட்டுச்சேரியில்    வசித்து   வந்தார்  .

  கோட்டுச்சேரியில்   நாளை   (16-10-2018)  செவ்வாய்க்கிழமை    மாலை  3.00 மணிக்கு  இறுதிச்சடங்குகள்  நடைபெற்று  தகனம்  செய்யப்படவுள்ளது.

  மூத்த  அரசியல்  தலைவரும், மீனவ  சமுதாய  முன்னோடி  தலைவருமான  ஜி. பஞ்சவர்ணம்   மறைவுக்கு  தேசிய  மீனவர்  பேரவை  தலைவர்,    முன்னாள்   சட்டமன்ற   உறுப்பினருமான  மா.  இளங்கோ  இரங்கல்   தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This