ஆளுநர் மாளிகை, சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பணம் பெற்றது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கமளிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய ஊழியர்களை வைத்து சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு என்று பணம் வசூல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என குற்றம்சாட்டினார்.
மேலும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு உணவு விடுதிகளில் இருந்து ஆளுநர் மாளிகை ஊழியர்கள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை கேட்பதாகவும் நாராயணசாமி அடுக்கக்கடுக்கான புகார்களை கூறினார்.