தமிழ் இனிமையான மொழி என ஆளுநர் புரோகித்

Forums Inmathi News தமிழ் இனிமையான மொழி என ஆளுநர் புரோகித்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14343
    Kalyanaraman M
    Keymaster

    சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ் இனிமையான மொழி என தெரிவித்தார்.

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையைத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால், அனைவருக்கும் காலை வணக்கம் என்றதுடன், தமிழ் இனிமையான மொழி என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் எளிமையான மற்றும் நேர்மையான நபர் என்பதை நினைவுகூர்ந்தார். பணிகளை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு குட்டிக்கதை மூலம் விளக்கிய ஆளுநர், ஊழலை ஒழித்தால், நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This