வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த 27 வயதான கார்த்திக் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கூட்டாளிகளுடன் சுற்றித் திரிந்த கார்த்திக்கை பிடித்த மகாகவி பாரதியார் நகர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கார்த்திக்கின் உடல் இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் போலீசார் தாக்கியதால் பலியானாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.
50க்கும் மேற்பட்ட போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுளள்னர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.