நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: ஸ்டாலின் கேள்வி

Forums Inmathi News நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: ஸ்டாலின் கேள்வி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14314
    Kalyanaraman M
    Keymaster

    நெடுஞ்சாலைத்துறை முறைகேடு குற்றச்சாட்டு மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை அப்பீல் செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நெடுஞ்சாலைத்துறை முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமையகத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அவர் அறிவித்ததற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This