அரசுப் பேருந்து மோதி கை இழந்தவருக்கு 82 லட்சம் இழப்பீடு

Forums Inmathi News அரசுப் பேருந்து மோதி கை இழந்தவருக்கு 82 லட்சம் இழப்பீடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14313
  Kalyanaraman M
  Keymaster

  அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் வலது கையை இழந்த பல் மருத்துவருக்கு 82 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கடந்த 2009 ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பல் மருத்துவர் சரவண ரூபன் வலது கையை இழந்தார். இதற்காக இழப்பீடு வழங்க கடந்த 2013ல்  தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு, ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணமெனக் கூறி இழப்பீட்டை 82 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This