ஓராண்டில் 30 லட்சம் டன் மீன் கரைசேர்த்த இந்திய மீனவர்கள்

Forums Communities Fishermen ஓராண்டில் 30 லட்சம் டன் மீன் கரைசேர்த்த இந்திய மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14311
  Kalyanaraman M
  Keymaster

  கடலில்  மீன் பிடித்து  கரைக்கு  கொண்டுவருவதில்  கடந்த  2017 ஆம்  ஆண்டில்  இந்தியா  முழுவதிலும்  மீனவர்கள்   30 லட்சத்து   83  ஆயிரம்   டன்  மீன்களை  பிடித்து  இதுவரை  உள்ள  சாதனைக்கு  அருகே  இரண்டாவது  இடத்தை  பிடித்துள்ளனர்.

  கடந்த   2012  ஆம்   ஆண்டில்   முன்   எப்பொழுதும்   இல்லாத  அளவாக  30 லட்சத்து  92 ஆயிரம்  டன்  மீன்களை   பிடித்து  கரைக்கு  கொண்டுவந்து  சேர்ந்து  இருந்தனர்.  தற்போது  அதற்கு  அடுத்தபடியாக  30 லட்சத்து    83  ஆயிரம்   டன்   மீன்  பிடித்துள்ளனர்.   கடந்த   2016  ஆம்  ஆண்டின்   மீன்   பிடித்தலை  விட  5.6%  கூடுதலாகும்.

  2017 ஆம்  ஆண்டின் மீன்  பிடித்தலை  பிராந்திய  வாரியாக  கணக்கிட்டால்  வட  மேற்கு  மாநிலங்கள்  12.84  லட்சம்  டன்களும்   தென் மேற்கு  மாநிலங்கள்   12.33  லட்சம்   டன்களும்   மீன் பிடித்து  உள்ளனர்.  தென்  கிழக்கு   மாநிலங்கள்    8.82  லட்சம்   டன்களும்   வட  கிழக்கு மாநிலங்கள்   4.82  லட்சம்   டன்   மீன்களையும்   கரை   சேர்த்துள்ளனர்.

  மாநில  வாரியாக  பார்த்தால்  7.86 லட்சம் டன் மீன் பிடித்து குஜராத் மாநிலம் முதலிடத்திலும்,  அதற்கு  அடுத்தபடியாக  தமிழ்நாடு  6.55  லட்சம்  டன்  மீன்   பிடித்து   இரண்டாவது   இடத்திலும்   உள்ளது.

  யூனியன்  பிரதேசங்கள் உள்பட  மொத்தம்  13 கடற்கரை  மாநிலங்களிலும்  4 கடற்கரை  மாநிலங்கள்  மட்டுமே  67  சதவீத   மீன்களை  பிடித்து   சாதனை   படைத்துள்ளன.

  கடலின் மேல்  பரப்பில்  இருந்து  பிடிக்கப்பட்ட  மீன்கள்  அதிகபட்சமாக  54 சதவீதமும்  அடிமட்டத்தில்  இருந்து  பிடிக்க படும் மீன்கள்  26.8 சதவீதமாகவும்  உள்ளது.

  கடலின்   மேல்  பாகத்திலிருந்து  பிடிக்கப்படும்  மீன்களுள்  எண்ணை    சத்து  மிக்க   மத்தி   மீன்கள்   மட்டுமே   16.3  சதவீத   இடத்தை   பெற்றுள்ளது.

  மேற்கண்ட  தகவல்கள்  மத்திய  கடல் மீன்வள  ஆராய்ச்சி  நிறுவனம்  (CMFRI)   வெளியிட்டுள்ள    தகவல்   அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This