சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியது என்றார்.
எஸ்.வி.சேகர் முகநூல் பதிவை கண்டித்த அரசியல் கட்சிகள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய தமிழிசை, வைகோ உள்ளிட்டோர் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து வாய் திறப்பதில்லை என விமர்சித்தார்.