புதுவை துணை நிலை ஆளுநர் ஊழலுக்கு உடந்தை: முதல்வர் நாராயணசாமி

Forums Inmathi News புதுவை துணை நிலை ஆளுநர் ஊழலுக்கு உடந்தை: முதல்வர் நாராயணசாமி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14293
  Kalyanaraman M
  Keymaster

  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சையாக வசூலித்து, சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலக ஊழியர்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியை வசூலிக்க அதிகாரமில்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, இந்த ஊழலுக்கு கிரண் பேடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சி.எஸ்.ஆர் நிதி கொடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் மிரட்டப்படுவதாகவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This