சிறு குற்றங்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் 51 நீதிமன்றங்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், குற்றத்தொடர்வு துறை இயக்குநரகம் சார்பில், அரசு வழக்கறிஞர்களுக்கான பயிற்சியை நீதிபதிகள் மணிக்குமார், சிவஞானம் மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், நடப்பாண்டில், குற்றவழக்குகள் அதிகளவில் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில், தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.