மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது என்றும் தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் இதே நிலைதான் வரும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு கழகங்களின் ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மக்கள் முகம் சுளிக்கவில்லை என்றும் வாந்தியெடுப்பதாகவும் தெரிவித்த அவர், ஊழல் குறித்து தமிழகத்தை இதுவரை ஆளாத கட்சிகள் தான் அரசை கேள்விக்கேட்க வேண்டும், என்ற அவர், அந்த வகையில் பா.ஜ.க.வுக்குத் தான் அந்தத் தகுதி இருப்பதாகக் தெரிவித்தார்.