பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள்: அமைச்சர் உதயகுமார்

Forums Inmathi News பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கைகள்: அமைச்சர் உதயகுமார்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14290
  Kalyanaraman M
  Keymaster

  பேரிடர் மேலாண்மை தினத்தையொட்டி மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், தேசிய பேரிடர் தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.

  தமிழகத்தில் 4 ஆயிரத்து 399 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This